கவிஞர் மு. முருகேசன்;
கிராமத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி துவங்கி வேகமாக நடைபெற்று வந்தது. நூறு வீடுகள் உள்ள தெருவுக்கு ஒரு குழாய் என்ற விகிதத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு வந்தன. அந்த கிராமத்தில் படித்த இளைஞர்களில் ஒருவர் விவேக். நகரில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறார். நல்ல விவரம் தெரிந்தவர். ஆனால் துடுக்கானவர். குழாய் பதிக்கும் பணயினை அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட்டு வந்தார். அவரிடம் சென்ற விவேக் எங்க தெருவில் அமையும் குழாயை என் வீட்டுக்கு எதிரில் அமைக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தான். அவரும் சரி பார்ப்போம் என்றார். ;