சொ. தெய்வநாயகம், வங்கி அதிகாரி (பணிநிறைவு) நினைவாற்றல் பயிற்சியாளர்;
கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை அரசுப் பள்ளிப் புத்தகங்களில் கேரள மாநிலம் நடப்புக் கல்வியாண்டில் இணைத்துள்ளது. கேரள மாநிலம் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குத் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பொதுக் கல்வித்துறையின் தொழில்நுட்பப் பிரிவான கேரளா உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி (கேஐடியி) சொல்லியுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள். இந்தியாவில் ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் செயற்கை நுண்ணறிவு கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல்முறை. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி 80,000 ஆசிரியர்களுக்கு மே மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. சரி, இந்த மாதம் மொழி நுண்ணறிவு குறித்துப் பார்ப்போம்.;