பெண் கல்வியின் அவசியம்

பெண் கல்வியின் அவசியம்

முனைவா் பிருந்தா நடராஜன் பேராசிாியா், அக்க்ஷையா மேலாண்மைக்கல்லூாி.;

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற வள்ளுவர், கல்வி என்ற தலைப்பின்கீழ் பத்து குறள்களின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைக்கிறார். எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும் எனக் கூறுகிறார். அதே நேரத்தில் அதை ஆணுக்கும் பெண்ணிற்கும் என்று பிரித்துச் சொல்லவில்லை. கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒருவேளை அவர்காலத்தில் அனைவரும் கல்வி கற்பது இயல்பானதாகவே இருந்திருக்கலாம். "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற ஔவையின் வாக்கு அந்த மூதாட்டியின் சுய அனுபவமாகவே இருக்கும். துவக்ககாலத்தில் தமிழ் சமூகம் பெண்களின் வழிகாட்டுதலில்தான் இயங்கிவந்தது. இடையில் ஏற்பட்ட தோய்வால், பெண்கல்வி தடைபட்டது. பெண்கல்வி சோதனை வயப்பட்டதும் அதை மீட்டெடுக்கப் பல சிந்தனையாளர்கள், போராளிகள், கவிஞர்கள் எழுந்தனர். "கண்களில்' இரண்டினில் ஒற்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும் காணீர்! என மகாகவி பாரதி உரக்கச் சொன்னது ஒரு உதாரணம். இன்றைக்கு ஆணுக்கு நிகராகப் பெண் கல்வித் தளத்தில் பயணிக்கிறாள்.;

Read More ...

Related Post