எழுத்தாளர் ஜி.இராமமூர்த்தி தேர்வுநிலை கல்லூரி நூலகர் (பணிநிறைவு);
இன்றைய உலகில் புறக்கணிக்கப்பட்ட நல்ல பழக்கங்களில் ஒன்றாகப் புத்தக வாசிப்பும் ஆகி விட்டதை வேதனையுடன் உணர முடிகிறது. அதே நேரத்தில், புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு இயங்கங்களும், புத்தகக் கண்காட்சிகளும், புதிய எழுத்தாளர்களின் வருகையும் வாசிப்பை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் ஷேக்ஸ்பியர், ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா ஆகியோரின் நினைவு நாளாக இது அமைந்துள்ளது. 1995ஆம் ஆண்டுப் பாரீசில் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் உலக அளவில் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்கதுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ;