நாகுவீர் பிரகாஷ் மூத்த அணித் தலைவர், தானம் அறக்கட்டளை ;
கல்வி உரிமைச் சட்டமானது பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவர்கள் பள்ளிகளில் சேராமல் இருக்கும் பட்சத்தில் அவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்து படிக்கச் செய்வதைப் பள்ளிகளின் கடமையாக வரையறுத்துள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள உலகின் முதல் கல்வி உரிமைச் சட்டம் நம் சட்டம் ஆகும். இச்சட்டம் பள்ளிக் கட்டமைப்பு, ஆசிரியர் மாணவர் விகிதம் முதலியவற்றையும் வரையறுத்துள்ளது. மாற்றுத்திறன் உள்ளவர்கள் 18 வயது வரை கல்வி பெறும் உரிமையை மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவலாகும். நீங்களும் உங்கள் குழந்தைகளின் கல்விக் கனவிற்கு உயிர் கொடுங்கள். ;