முனைவர். ம. புஷ்ப ராணி, இயக்குநர் மற்றும் பேராசிரியர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ;
பெண்களுக்குக் கல்வி என்பது அவர்களுக்கு அறிவுத் திறன்களை வளர்ப்பது மட்டுமல்லாது அவர்களது நம்பிக்கையை நிலைநாட்டி, தங்கள் உரிமைகளை உறுதி செய்து, சமூக மற்றும் பொருளாதார துறைகளில் பங்களிக்க உயரிய திறனை அளிக்கும் ஒரு மாபெரும் கருவி ஆகும். பெண் என்றாலே மெல்லியளாள் என்று பொதுவான பார்வை இருக்கிறது. ஆனால், அவள் ஆணை விட வலுவானவள் என்ற உண்மை யுகங்களாக மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது.;