இராம. பெருமாள் ஆச்சி தமிழாசிாியா், சென்னை. ;
ஒரு நாட்டின் முன்னேற்றமும், வளர்ச்சியும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மதிப்பிடப்படுகின்றது. வல்லரசு நாடுகள் கல்வியில் மேன்மை அடைந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்கை நன்றே" என்கிற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறநூனூற்று வரிகள் சங்க கால கல்வியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழின் பழைமையான இலக்கண நூலான தொல்காப்பியமும் கற்றலில் மாணவர்களின் நிலைகளை விளக்குகின்றது. ;