முனைவர் மா. உமாமகேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை, அருள்ஆனந்தர்கல்லூரி, கருமாத்தூர் மதுரை- 625 514;
உயிர்வாழ்வதற்குத் தேவையான காற்றை மொழியாக மாற்றிக் கொண்டவன் மனிதன். மொழி என்பது மக்கள் படைத்துக்காக்கும் அரியதொரு கலை. மக்களின் அறிவை வளர்ப்பது மொழியாகும். ஒரு குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுவது. அதுவே வாழ்க்கையில் அவள் அடையும் முதல் மகிழ்ச்சியாகும். தாய் தன் குழந்தையிடம் பேசி மகிழ்வது என்பது தாய்மொழியாகி அதுவே குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்து வளர்ந்து வருகின்றது. தன் குழந்தைக்குத் தாய்மொழியைக் கற்பிக்கின்ற தாயே முதல் ஆசிரியர் ஆவார். அப்படிப்பட்ட தாய்மொழியைக் காப்பது நம் அனைவரின் கடமைமயாகும். தாய் மொழிகளின் சிறப்பை எடுத்துரைப்பதற்கும் யுனெஸ்கோ கடந்த 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாக் கொண்டாடி வருகிறது. ஏன் அந்த நாள்..? ஏன் தாய்மொழி அவசியம்? ஏன் காக்கவேண்டும் ? தமிழ்மொழி Read More;