தமிழ்ச்செம்மல் முனைவர் வை.சங்கரலிங்கனார்;
வள்ளல்களைப் போல் சுய நலம் கருதாது நாமும் வாழலாம் தான். நம்மால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுக்கலாம். கொடுக்க முடியாதவற்றை இல்லை என்றும் கூடச் சொல்லலாம். இதைக் குற்றம் என்று சொல்ல இயலாது. இதற்கு மாறாக, இவரிடம் சென்றால் உணவோ அல்லது பணமோ கொடுப்பார் என்று உள்ளத்தில் எண்ணி எதிர்பார்த்து வந்து நிற்பவனுக்கு, தன்னிடத்துள்ள பணத்தையோ அல்லது உணவையோ பகுத்துக் கொடுக்காமல் தாம் மட்டும் உண்பவராக ஒருவன் இருந்தால்? என்ற நமது கேள்விக்குக் கவிஞர் முன்றுறை அரையனார் எழுதிய இந்தப் பழமொழி நானூற்றுப் பாடல் உரிய விடை சொல்கிறது. Read More ;