பேராசிரியர் பெ.விஜயகுமார்;
மரங்களிடையே கோலியாத் எனலாம் பனை மரத்தை..... என்றெழுதி நாவலின் சூழலை அழகுறச் சித்திரிக்கிறார். வாசகர்களைக் கைப்பிடித்துப் பனைவிளைக்குள் கூட்டிச் சென்று விடுகிறார். அவர்களுக்குச் சொந்தமான பனை மரத்திலிருந்து அக்கானி (பதநீர்) இறக்கும் பனையேறி தங்கையனின் குடும்பம் புத்தம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிறது. வீட்டுப் பெண்கள் அக்கானியைக் காய்ச்சிக் கருப்பட்டி செய்கிறார்கள் பனையேறிகளின் வாழ்க்கை நாவலில் ஆழமாகவும், அழகுணர்ச்சியுடனும் சொல்லப்பட்டுள்ளது. புத்தம் வீடு கடுமையான சமூகப் பழக்கங்கள் மற்றும் தப்பெண்ணங்கள் காரணமாய் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்திக்கும் ஒரு இளம்பெண் தன் மன உறுதியால் இறுதியில் வெற்றி பெறும் கதையைச் சொல்லிடும் செவ்வியல் நாவல் என்பதில் ஐயமில்லை. மண்ணின் மணத்துடன் வட்டார மொழியில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல் கிட்டத்தட்ட எழுபதாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தம் வீடு இப்போது வாசிக்கும்போதும் புத்துணர்வைத் தரும் நாவலாகும். Read More...;