எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;
பிறமொழி பேசுபவர் கூடத் தமிழைக் கேட்கும்போது அம்மொழியின் ஓசையே காதுக்கு இனியாக உள்ள தெனப் பிறர் சொல்லிக் கேட்டதுண்டு, உண்மையின் எனது தோழியின் மருமகள் சொல்லிய உணர்வுபூர்வமான கருத்து இது. அவள் ஆந்திரதேசத்தின் தெலுங்கு பேராசிரியை இத்தனைக்கும் தமிழ் பேசவும் எழுதவும் தெரியாது. உண்மையில் தமிழ் மொழி தேன்மொழி, இன்று, தொடு என்ற சொல்லையும், சொல்லின் தொடரையும் அதனைத் தொடர்ந்து வரும் சொற்களின் அருமையையும் பற்றிப் பார்ப்போம். தொடு அல்லது தொடுதல் எல்லோரும் அறிந்த பொருள். தொடு, தொடுத்த என்ற வார்த்தைகள் இலக்கியத்தில் நிரம்பக் காணக்கிடக்கின்றன. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல/ விடிற்சுடல் ஆற்றுமோ தீ (குறள்1159) தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ? என்று அர்த்தம் சொல்கின்றனர்.;