எழுத்தாளா் அநுத்தமா சீனிவாசன்;
தமிழ் மொழி குலம் காக்கும் மொழி, நேசம் பழகும் மொழி, எல்லா வளமும் சேர்க்கும் மொழி. உயிர்மெய்யான மொழி. இன்று திரி என்ற சொல்லின் வகைவகையான பொருளைப் பற்றிப் பார்ப்போம். திரி. நாம் நமது பேச்சு வழக்கில் நன்கறிந்த சொல். திரி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது, விளக்குத்திரி. பளிச்சென்று தோன்றும் சொல். அகலில் எண்ணெய் ஊற்றி, அதில் பஞ்சு, நூல் திரியிட்டு இருள் நீங்க காலையும் மாலையும் ஒளியேற்றி இறைவனை வழிபடுவது நமது தமிழ்மரபு.;