திருவளத்தானும்.. திருவருளும்..

திருவளத்தானும்.. திருவருளும்..

எழுத்தாளா் அனுத்தமா;

தமிழ் மொழியைக் கற்கும்போதே, அது நமக்கானது. நம்மிலே இருப்பது, நம்முடையது என்ற அழுத்தமான உணர்வை நம்முன்னே உருவாக்கிவிடும் சக்தியுடையது. இன்று திரு என்ற சொல்லைப் பற்றியும், அதனைத் தொடரும் பிற சொற்களின் அரிய பொருள் பற்றியும் காணலாம். திரு என்றாலே, அழகு, செல்வம், சிறப்பு, உயர்வென்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றைத் தவிர, இக்காலத் தலைமுறையினருக்குப் புரியாத வழக்கொழிந்து போன சிறு சொற்களுமுண்டு. அவற்றை இப்போது பேசலாம். திரு என்ற சொல் சோதிடம் சொல்பவனையும் குறிக்குமாம். இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு செய்தி சொல்லட்டுமா? எனது கிராமத்திலுள்ள ஒரு கிழவி ஜோசியக்காரனை பகிரங்கமாகத் திருகுதாள வாயன் என நையாண்டி செய்வாள்! அவளுக்கு சோதிடர் மேலே வெறுப்பா அல்லது ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லையா எனத் தெரியவில்லை. ஜோதிடன் அவனிடம் ஒன்றைச் சொல்லி அது பொய்த்துப் பலிக்காமல் போயிருக்கும்! அதுதான் அந்த இகழ்ச்சி! அவன் செய்வினை ஜோதிடனாயிருக்க வேண்டும்! ஆனால் நல்வினை ஆற்றுபவனுக்கு திரு என்ற சொல் மிகவும் பொருத்தமானது.;

Read More ...

Related Post