சுளுந்தீகாட்டும் வெளிச்சத்தில்...

சுளுந்தீகாட்டும் வெளிச்சத்தில்...

பேரா.பெ.விஜயகுமார்.;

பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்றை அறியச் செய்யும் நாவல் முத்துநாகுவின் ’சுளுந்தீ’. இது வரலாற்று நாவல்களின் காலம். பூமணியின் ‘அஞ்ஞாடி’. சு.வெங்கடேசனின் ’காவல் கோட்டம், கரன் கார்க்கியின் ’மரப்பாலம்’, ஜெயமோகனின் ’வெள்ளை யானை’, சுகுமாரனின் ’வெலிங்டன்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ’நெடுங்குருதி’ மற்றும் ‘இடக்கை’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, வேல ராமமூர்த்தியின் ’பட்டத்து யானை’, விநாயக முருகனின் ’வலம்’ என்று தொடர்ந்து வரலாற்று நாவல்கள் தமிழ் புனைஇலக்கிய வெளியை அலங்கரித்த வண்ணமுள்ளன. இதனைத் தொடர்ந்து முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ பதினெட்டாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் ஆட்சியின் ஒரு பகுதியான கன்னிவாடியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சிப் பகுதியை பாளையங்களாகப் பிரித்து அரண்மனையார் எனும் பெயரில் பாளையக்காரர்கள் தலைமையேற்க அரசாட்சி நடந்தது. அரண்மனையாரின் கீழ் ஒரு தளபதி, அரண்மனைப்படைகள், குடிகள், குடிப்படைகள், குடியானவர்கள், பல்வேறு தொழில் செய்பவர்கள், புலவர், மடாதிபதிகள், செஞ்சி அரசின் இஸ்லாமியப் படைவீரர்கள் என்று பலரும் சுளுந்தீ நாவலில் வலம் வருகிறார்கள். இவ்வரலாற்றுக் காலத்தில் குடிமக்கள் பலரும் குலநீக்கம் செய்யப்பட்டு, உரிமைகள் இழந்து, வறுமையில் உழன்று, கொடூரமாக நசுக்கப்பட்டு வாழ்ந்த சோக வரலாற்றை நாவலாசிரியர் முத்துநாகு பதிவு செய்துள்ளார்.;

Read More ...

Related Post