முனைவர் த.காந்திமதி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி, மதுரை;
மனித குலம் தோன்றிய நாள் தொடங்கி ஆண், பெண் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குடும்பம் என்ற ஒன்றை வலுவுடையதாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில், தாய் வழிச் சமூகத்தில் பாலியல் கட்டற்ற தன்மை இருந்தது. இடையறா இனக் குழுச் சண்டைகளில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்த பின்னர், தந்தையை அடையாளப்படுத்திய பல தார மணம் கொண்ட ஆணாதிக்க சமூகமாக மாறியது, இப்போது பெண்களின் பாலியல் உறவினை முறைப்படுத்தும் செயல்கள் உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்டன. அதனால் குழு வாழ்க்கை என்ற முறைமை மாற்றமடைந்து குடும்ப வாழ்க்கை முறை உருவானது. (குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஃபிரடெரிக் எங்கெல்ஸ்). ;