ஆா்.வெங்கடேசன் பேச்சுமொழி மற்றும் கேள்வியியல் துறை நிபுணா், கஸ்தூரி காந்தி மருத்துவமனை, சென்னை.;
உலகெங்கிலும் உள்ள காதுகேளாத சமூகங்களின் மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் உலகம் முழுவதும் செப்டம்பா் 23ஆம் தேதி சைகை மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சைகைமொழி (Sign language) என்பது பலவிதமான கை அசைவுகள், கண் மற்றும் முகப் பாவமனைகள் மூலம் சேப்படுகிறது. உலகளாவிய சைகைமொழி என்று ஒன்று இல்லை. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதை போலவே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமொிக்கச் சைகை மொழி, பிாிட்டிஷ் சைகை மொழி என 300 வகைகள் உள்ளன. இது காதுகேளாதவா்களின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. ;