எழுத்தாளர் அநுத்தமா;
சாப்பிட மட்டுமல்ல, கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் தட்டும் உண்டு. தட்டில் தீபமேற்றிக் காண்பிக்கும் தோரணையை வைத்தே ஒருவர் நிலையைச் சொல்லும் வழக்கம் இருந்தது. தீபம் ஆடாமல் நேராக நிற்கும் அளவிற்குப் பொறுமையாகத் திருமுகம், பாதத்தினை நோக்கி ஆரத்தி காட்டுபவர், உறுதியான மனம் படைத்தவர். இவர் இறைவன் மீது அதிக நம்பிக்கை உள்ளவர். எனவே, இவரது வேண்டுதல் மிக விரைவில் நடந்தேறும். வேகமாக ஆரத்தி தட்டினை சுற்றுபவர் அவசரக்காரர். இவருக்கு எதுவும் கை கூடாது. கை கூடினாலும் இழந்து விடுவார். ஆன்ட்டி கிளாக் வைஸ் என்கிற வலமிருந்து இடமாக ஆரத்தி தட்டினைச் சுற்றுபவர் எவ்வளவு முன்னேறினாலும் சீக்கிரமாகக் கீழே வந்துவிடுவார். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்கிறீர்களா?;