ஆசிாியா் சு.மூா்த்தி ஒருங்கிணைப்பாளா் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு;
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறந்தாச்சு.. மக்களின் பள்ளிகளான அரசு பள்ளிகள் மீது நம் கவனத்தை அதிகப்படுத்தவேண்டிய தருணம் இது. மக்களின் வயது அடிப்படையில் கல்வி குறித்தான கணக்கெடுப்பு நடத்தினால் 30 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்கள். 5 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அதிகமானோர் தனியார் பள்ளிகளில் பணம் கொடுத்து படிப்பவர்களாகவோ படித்தவர்களாகவும் இருப்பார்கள். கல்வி தனியாரின் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. தனியார் கல்வியின் வளர்ச்சியினால் அரசுப் பள்ளிகள் ஏழைகளின் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. 1980க்கு பிறகு ஏற்பட்ட தனியார்மய, வணிகமயக் கல்விக் கொள்கையின் விளைவு இது.;