சொ. தெய்வநாயகம், வங்கி அதிகாரி (பணிநிறைவு), நினைவாற்றல் பயிற்சியாளர்;
எல்லோருக்குமே நுண்ணறிவு என்பது சிறப்பாக இருக்கும். இருந்தாலும் சிலருக்கு மொழியிலும், சிலருக்கு கணிதத்திலும் இன்னும் சிலருக்கு கலை, இசை, ஓவியம் எனப் பல துறைகளிலும் வெளிப்படும். ஒருவரே எல்லாவற்றிலும் எப்படிச் சிறந்து விளங்க முடியும் என்பதைப் பார்க்கலாம். நுண்ணறிவு (Intelligence) என்பது எவ்வளவு வேகமாக விஷயங்களைக் கிரகிச்சு அதை நாம் செய்யும் செயலில் ஈடுபடுத்துவது. புத்திசாலித்தனம் அல்லது புத்திக் கூர்மை. கொஞ்சம் ஒருபடி எக்ஸ்ட்ராவா இன்ட்ரஸ்ட் எடுத்துச் செய்யும்போது எந்த விஷயமும் ரொம்பச் சிறப்பாக வெளிவருவதைப் பார்க்க முடியும்.;