முனைவர் ஜா.ஜூலி பிரதிபா, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை - 2.;
தமிழ்மொழி என்றும் குன்றாத இளமையும், சிறப்பும், இனிமையும் நிறைந்த மொழி. மூத்தமொழி என்ற பெருமையுடைத்தது. பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் ஏராளமானவர்கள். தமிழைப் பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் பேசுதல், எழுதுதல் வேண்டும் என்று பாடுபட்டவர்களுள் மறைமலையடிகள் குறிப்பிடத்தக்கவராவார். வேதாச்சலம் என்னும் தனது பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டவர். தாம் நடத்தி வந்த “ஞானசாகரம்” என்னும் இதழை “அறிவுக்கடல்” எனவும், “சமரச சன்மார்க்க நிலையம்” என்பதை “பொதுநிலைக் கழகம்” எனவும் மாற்றினார்.;