மு.மகேந்திர பாபு, தமிழாசிாியா், மதுரை.;
"காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி " எனப்பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. நதிக்கரை நாகரீகங்களில் தமிழை வளர்த்த பெருமை பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணிக்கும் (நெல்லை), வைகைக்கும் (மதுரை) உண்டு. இருபதாம் நூற்றாண்டில் தம் பாடல்களின் மூலம் எழுச்சியைச் தந்து சுதந்திர வேட்கைக்கு வித்திட்டவர் மகாகவி பாரதியார். அதுபோல் சிறுகதை மூலம் சிகரம் தொட்டவர் புதுமைப்பித்தன். தெய்வங்களையும் , மன்னர்களையும் பாடுபொருளாக இலக்கியங்கள் படைக்கப்பட்டு வந்த காலம் மறைந்து சாமானிய மக்களையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்டன. அன்றாட வாழ்வியலை , எளிய கதை மாந்தர்கள் மூலம் சிறுகதையாகப் படைத்து நிலைத்து நிற்பவர் புதுமைப்பித்தன் அவர்கள். புதுமைப்பித்தன் என்றால் சிறுகதையில் புதுமை புகுத்தியவர் என்றே சொல்லலாம். ;