கலைமாமணி, பேராசிரியர். முனைவர். கு. ஞானசம்பந்தன்;
படிக்கும்போது டென்ஷனாக இருக்கும். அதைக் குறைக்கத்தான் இந்த சிப்ஸ் எல்லாம் கொரிக்கிறேன் தாத்தா.. தப்பு.. தப்பு.. மன அழுத்தத்தில் இருக்கும்போது, கொழுப்புச்சத்து மிகுந்த உணவு உண்பது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் என்றும், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனைக் குறைக்கும் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிர்மிங்கம் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளைக்குச் சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் அது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருக்கும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது, ரத்த அழுத்தம் கூடுகிறது, மூளைக்குப் பாயும் ரத்தம் அதிகமாகிறது. இந்த நேரத்தில் கொழுப்புச் சத்துமிக்க உணவை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். ரத்த ஓட்டம், 1 சதவிகிதம் பாதிக்கப்பட்டால் கூட, அது இதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பை, 13 சதவிகிதம் அதிகரித்துவிடும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இதெல்லாம் சாப்பிடாதே. அப்ப என்ன தான் சாப்பிடறதாம்..? காற்றையா... அத சுவாசிக்கலாம், திங்க முடியுமா? ;