முனைவர் பெ. சசிக்குமார், விஞ்ஞானி இஸ்ரோ/ அறிவியல் எழுத்தாளர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம். ;
1957ஆம் ஆண்டு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுப் புவியை வலம் வரத் தொடங்கியது. அன்று முதல் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பல நாடுகளும் முன்னெடுப்புகளைத் தொடங்கின. இந்தியாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி தொழில்நுட்பத்தை வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். ;