நடைபாதையின் அவசியம்...
நடைபாதையின் அவசியம்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

நடைபாதையின் முக்கியத்துவம் குறித்து ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு முறை உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, சாலைகளில் நடைபாதையின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. “நடைபாதைகளில் நடப்பது பாதசாரிகளின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றவேண்டும்” என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.. கர்நாடகத்தைச் சேர்ந்த ஷேகரியா, தனது 5 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக நடந்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி சிறுவன் மீது மோதியதில், அவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் “நடப்பதற்கான உரிமை” என்பது பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 19இன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும்.

பல மொழி கற்போம் பல்லாண்டு வாழ்வோம்...
பல மொழி கற்போம் பல்லாண்டு வாழ்வோம்...

கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்

தாத்தா..This is too much. நீங்க ஏன் காலையில இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சீங்க ஓஹோ!! நீ தாமதாய் எழுந்திருச்சுட்டு எங்கிட்ட சண்டைக்கு வர்றியா. ஆமா நேத்து ஞாயிற்றுக்கிழமைதானே. மதியம் நல்லா தூங்கியிருப்பாய். இருந்தாலும் இப்ப காலையில் ஏன் லேட்டா எந்திருச்சு வர்ற. நேத்து மத்தியானம் எங்க தூங்க விட்டாங்க.. ஒரே கார் சத்தம், பைக் சத்தம், பக்கத்துவீட்டு பில்டிங் வேலை சத்தம். பேசாம ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கூல் வக்கச் சொல்லணும். கிளாஸ்லதான் நல்லா தூக்கம் வருது. நேத்து மத்தியானம் நல்லாவே தூங்கலை தாத்தா. அதுசரிதான். சத்தமே வரக்கூடாது என்றால் உனக்கு பின்லாந்து நாட்டிலுள்ள பாதுகாப்பு அரணுக்குள்தான் இடம் பிடிக்க வேண்டும்.

September  Full PDF

இம்மாத இதழில்

தலையங்கம்

நடைபாதையின் அவசியம்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

நடைபாதையின் முக்கியத்துவம் குறித்து ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு முறை உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, சாலைகளில் நடைபாதையின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. “நடைபாதைகளில் நடப்பது பாதசாரிகளின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றவேண்டும்” என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.. கர்நாடகத்தைச் சேர்ந்த ஷேகரியா, தனது 5 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக நடந்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி சிறுவன் மீது மோதியதில், அவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் “நடப்பதற்கான உரிமை” என்பது பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 19இன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும்.

தலையங்கம் கட்டுரைகள்

சமூகம்

பாரம்பரியம்

அகழ்வாராய்ச்சி : பழமையும் புதுமையும்

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை

அகழ்வாராய்ச்சி என்பது மண் மற்றும் குப்பை மேடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அகற்றுவதன் மூலம் மனித வரலாறு, புவியியல் அமைப்புகள் மற்றும் தொல்லியல் எச்சங்களை முறையாக வெளிக்கொணர்வதாகும். இது பொதுவாக தொல்லியல் துறையுடன் தொடர்புடையதாக இருந்தாலும், தொல்லியல், புவியியல் மற்றும் நவீன குடிசார் பொறியியல் ஆகியவற்றிலும் அகழ்வாராய்ச்சி முக்கிய பங்களிக்கிறது. இது மறைக்கப்பட்ட கடந்த காலத்திற்கும் தற்கால அறிவுக்கும் இடையே ஒரு அறிவியல் பாலமாக செயல்பட்டு, புதைக்கப்பட்ட பௌதிக சான்றுகளைக் கால வரிசைக் கதைகளாக மாற்றுகிறது. அகழ்வாராய்ச்சி இல்லாமலிருந்திருந்தால் மனித வரலாற்றின் பெரும்பகுதியும், உலக பரிணாம வளர்ச்சியும் உலகத்தின் அடிப்படையிலிருந்து அணுக முடியாதவையாகவே இருந்திருக்கும்.

கல்வி

ஆசிரியர் பணி என்பது....

முனைவர் சூ. வானதி முதல்வர் (பணி நிறைவு) அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே - என்பது ஔவையின் அமுத மொழி. ஆசிரியர் என்போர் அறவோர். அறத்தின் பால் ஈடுபாடு கொண்டு மாணவர்களிடம் அன்புடனும் கடமை உணர்வுடனும் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகின்ற வளமான சிந்தனைகளுடன் துணை நிற்பவரே ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கான தினமாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். உலகிலேயே ஒரு ஆசிரியரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது இந்தியாவில் மட்டும் தான் என்பது பெருமைக்குரியதாகும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறான் பாரதி . எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி. நமக்கு எழுத்தைக் கற்றுக் கொடுத்து, அறிவை வளர்த்து, நல்வழி காட்டும் ஆசிரியரை இறைவனுக்கு நிகராக மதித்து போற்ற வேண்டும் என்பதே இதன் ஆழமான பொருளாகும்.

கல்வி கட்டுரைகள்

வாழ்வியல்